
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அச்சுறுத்தலை அடுத்து, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு, மாவட்ட செயலக வளாகத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சோதனை நடவடிக்கைகளின் காரணமாக, மாவட்ட செயலகத்திற்கு சேவைகளைப் பெற வந்த பொதுமக்கள் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

