போதைப்பொருள் தடுப்பு விசேட சுற்றிவளைப்பு ; 6,641 பேர் கைது

போதைப்பொருள் தடுப்பு விசேட சுற்றிவளைப்பு ; 6,641 பேர் கைது

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், போதைப்பொருள் குற்றச்செயல்கள் தொடர்பாக இதுவரை 6,641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 1,793 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 3,683 கிலோகிராம் ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கூடுதலாக 16,686 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )