
எஹலியகொடை நகரில் கார் ஒன்று வரிசையாக நின்ற வாகனங்களுடன் மோதிபதில் பல வாகனங்கள் சேதம்
எஹலியகொடை நகரில் இன்று இரவு கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, வரிசையாக நின்றிருந்த வாகனங்களுடன் மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (ஏப்ரல் 15) இரவு 7 மணியளவில் எஹலியகொடை நகரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிள், 3 சக்கர வண்டிகள் மற்றும் 2 கார்கள் என வரிசையாக பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக எஹலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் இழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

