ஈரான் -அமெரிக்க மோதலை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் தெஹ்ரான் சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி

ஈரான் -அமெரிக்க மோதலை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் தெஹ்ரான் சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி

ஈரான் மீதான போர் முடிவை நெருங்கிவிட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, மோதல் மீண்டும் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சியாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி தெஹ்ரான் சென்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மீண்டும் அங்கு சந்தித்துப் பேசுவது குறித்து அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இஸ்ரேலுடன் இணைந்து தான் தொடங்கிய ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

கடந்த வாரம் எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் நீடிக்கப்படும் என்று இஸ்ரேல் எதிர்பார்ப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தடையால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலடியாக பிராந்தியத்தின் வர்த்தகப் போக்குவரத்தை நிறுத்தப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், அதன் காலக்கெடு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர அவநம்பிக்கை காரணமாகத் தேக்கமடைந்துள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச அளவில் தூதரக ரீதியிலான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )