மணல் ஏற்றிச் சென்ற லாரி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு

மணல் ஏற்றிச் சென்ற லாரி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில், பொலிஸ் உத்தரவை மீறி வேகமாக சென்ற லாரி ஒன்றை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (1) அதிகாலை தர்மபுரம் புலியன்பொக்கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அனுமதி பத்திரம் இன்றி மணல் கடத்திச் சென்ற லாரி ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்திய போதும், அதனை மீறி சென்றதால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு லாரியின் பின்புற டயர்களைத் தாக்கியதுடன், அதன் ஓட்டுநர் வாகனத்தை அந்த இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )