
மினுவாங்கொடையில் வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் சந்தேக நபர் கைது
மினுவாங்கொட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, அதற்கான ஒரு மெகசின் மற்றும் T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 25 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொட ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்து மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
CATEGORIES Sri Lanka

