மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

யக்கலமுல்ல பகுதியில் அமைந்துள்ள கரகொட தேயிலைத் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற மின்சார விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தொழிலாளி, தொழிற்சாலையின் கெரேஜ் பகுதியில் வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த வேளையில் திடீரென மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தையடுத்து, படுகாயமடைந்த தொழிலாளி உடனடியாக கரபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எனினும், அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மின்சாரக் கோளாறு குறித்து யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )