விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களப் பதவிக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களப் பதவிக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான எஸ். அச்சுதன், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது வெற்றிடமாக உள்ள விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான ஒருவரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும் 06 விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய நேர்காணலில் பங்கேற்றனர்.

இதில்இ தற்போது தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையராகப் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான எஸ்.

அச்சுதன், நேர்காணல் பிரிவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2026-01-01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திரு. அச்சுதனை அந்தப் பதவிக்கு நியமிக்க இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )