
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இந்த மாதம் மாற்றமில்லை
இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தை நிலவரங்களின் அடிப்படையில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்பட்டாலும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இவ்வேளையில் விலை மாற்றம் செய்யப்படமாட்டாது என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
மேலும், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு 1,482 ரூபாய்க்கும், 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 694 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

