
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் ஈச்சிலம்பற்று – முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனத் தெரிய வந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

