
11 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 11 இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம்– காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (01) கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் பயணித்த ஒரு படகும், மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

