கஞ்சாவுடன் ஒருவர் கைது

கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஹம்பேகமுவ – குக்குல்கடுவ பகுதியில் நேற்று (01) மாலை கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து 121 கிலோ 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கைதான நபர் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )