
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான நில மீட்பு உரிமைப் போராட்டம் சற்றுமுன்னர் தையிட்டி விகாரை முன்றலில் ஆரம்பமாகியுள்ளது.
போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் ஏராளமாான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
“அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி” என்ற தொனியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

