
ஜனவரி 15 முதல் நாடு முழுவதும் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்த முடியும்
எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பிறகு, GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி நாடு முழுவதும் வழங்கப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் W.P.J. சேனாதீர கூறுகிறார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இது பற்றி மேலும் கூறியபோது
” 15 ஆம் திகதிக்கு முன்பு நாடு முழுவதும் இந்த திட்டம் விவிவாக்கப்படும் . GovPay மூலம் ஆன்லைனில் அபராதம் செலுத்தலாம். அதிகாரிகளுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. . ஓட்டுநர்கள் பொலிஸாருக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் ஒரு குற்றம்.
நாங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் செயல்படுகிறோம். எதிர்காலத்தில் போலீஸார் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத வகையில் இந்த திட்டம் அமையும்..”
CATEGORIES Sri Lanka

