
அம்பலாங்கொடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாடி கட்டடத்தில் சடலம் மீட்பு
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 18 மாடி கட்டிடத்தின் 15 வது மாடியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பலபிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டதுடன் மேலும் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

