டொனால்ட் ட்ரம்பின் உத்தரவில் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்

டொனால்ட் ட்ரம்பின் உத்தரவில் வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்

வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஒரு தாக்குதல் என்றும், அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும் பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று (3) அதிகாலை 1.50 அளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதல்களின் இலக்கு, பல வெனிசுலா இராணுவத் தளங்கள் என்று கூறப்படுகிறது.

இதன் விளைவாக, நகரத்தின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

வெடிப்புகளைத் தொடர்ந்து நகரத்தின் மீது விமானங்கள் எவ்வாறு பறந்தன என்பதையும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை , வெனிசுலாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நாட்டில் உடனடியாக தேசிய அவசரநிலையை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ,அமெரிக்கா இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. என்றும் பெயர் வெளியிட விரும்பாத நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், வெனிசுலாவிற்குள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்ததாக அல் ஜசீரா செய்திவெளியிட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )