பிரான்சில் காட்டுத்தீ ; 13 பேர் காயம்

பிரான்சில் காட்டுத்தீ ; 13 பேர் காயம்

பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து, பிரான்சின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூஸ் ஆகிய 3 தெற்கு பகுதி நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்த காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் காயம் அடைந்துள்ளனர் அவர்களில் 9 பேர் தீயணைப்பு வீரர்கள் ஆவர். இதனால், அந்த பகுதியில் தீப்பற்ற கூடிய பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர் தெளிக்கும் விமானங்களும் சம்பவ பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )