காங்கோவில் படகுகள் கவிழ்ந்து விபத்து ; 193 பேர் உயிரிழப்பு

காங்கோவில் படகுகள் கவிழ்ந்து விபத்து ; 193 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கோவின் லுகோலிலா பகுதியில் உள்ள காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது இதில் படகு கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 209 பேர் மீட்கப்பட்டதாக காங்கோ அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, அதே மாகாணத்தில் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பசன்குசு பகுதியில் மற்றொரு மோட்டார் படகு விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 86 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

காங்கோவில் மோசமான சாலை கட்டமைப்புகள் காரணமாக, மக்கள் மலிவான படகு பயணங்களை அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )