நாவலப்பிட்டியில் திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி

நாவலப்பிட்டியில் திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி

நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் நேற்று (13) முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியின் உரிமையாளர் நாவலப்பிட்டி தெகிந்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் திரும்புகையில், நேற்று (13) அதிகாலை நாவலப்பிட்டி தெகிந்த வீதியில் திடீரென தீ ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவே தீ விபத்துக்கான காரணம் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )