ஈரானின் பாதுகாப்பு என்பது யாராலும் தாண்டக்கூடாத சிவப்பு கோடு

ஈரானின் பாதுகாப்பு என்பது யாராலும் தாண்டக்கூடாத சிவப்பு கோடு

ஈரானில் பொருளாதார நெருக்கடி, கடும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஈரானில் நடைபெறும் அமைதியான போராட்டங்களுக்கு எதிராக அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கி பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

டிரம்பின் இந்தக் கருத்துக்கு ஈரான் கடும் பதிலடி அளித்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆலோசகர் அலி ஷாம்கானி கூறுகையில்,


“ஈரானின் பாதுகாப்பு யாராலும் தாண்டக்கூடாத சிவப்பு கோடு. எங்கள் உள்நாட்டு விஷயங்களிலும் பாதுகாப்பிலும் வெளிநாட்டு சக்திகள் தலையிட முயன்றால், அதற்கான கடுமையான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் காசாவில் அமெரிக்க தலையீடு ஏற்படுத்திய பாதிப்புகளை ஈரான் மக்கள் நன்கு அறிவார்கள்” என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )