நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

 நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் – நொச்சியாகம, சீரம்பகம குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நேற்று (03) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நொச்சியாகம, மஹபுலன்குளம் 38 வது மைல்கல் பகுதியை சேர்ந்த 67 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )