
காலியில் கனமழை ; பல வீதிகள் நீரில் மூழ்கின
காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த கனமழை காரணமாக, நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, காலி – வக்வெல்ல வீதியூடான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

