
தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்
சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை கொண்டதாகக் கூறப்படும் தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பாடம் தொடர்பில் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் பொதுமக்களின் கவலைகளை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாடப்புத்தக உள்ளடக்கங்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

