
இலவச பாடசாலை சீருடைகள் பற்றி வெளியான தகவல்
2026 ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
சீன மக்கள் குடியரசு நாட்டிற்கு 11.484 மில்லியன் மீற்றர் துணியை நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும் இதுவரை அனைத்து துணி கையிருப்புகளும் துறைமுகத்தில் பெறப்பட்டுள்ளன.
சீருடைகளை நன்கொடையாக வழங்குவதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி அன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
CATEGORIES Sri Lanka

