
மட்டக்களப்பில் அம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் இருவர் வைத்தியசாலையில் மின்கம்பம் உடைந்து மின்சாரம் துண்டிப்பு
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்பட்ட போது வாகனத்தில் இருந்த சாரதி மற்றும், நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .
அத்தோடு மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கியதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த அம்பியூலன்ஸ் ,பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாரிய மின்கம்பத்தில் மோதியுள்ளதுடன், அருகில் இருந்த பனைமரத்திலும் மோதியுள்ளது.
இதனால் குறித்த பிரதேசத்தில் மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான இந்த அம்பியூலன்ஸ் வண்டியும் முற்றாக சேதமடைந்துள்ளது.
காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

