
ஊவா மாகாணத்தில் வங்கி அட்டைகள் மூலம்பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை ஆரம்பம்
பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறை ஊவா மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று பதுளையில் உள்ள ஊவா மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் தொடர்புடைய அனைத்துபஸ் உரிமையாளர்கள் மற்றும் வங்கி பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களின் கீழ், வங்கி அட்டைகள் மூலம் டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெறும் வசதி மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு அளிக்கப்பட்டதாகவும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையைச் சேர்ந்த அனைத்துபுஸ்களுக்கும் இந்த டிஜிட்டல் கட்டண வசதியை சில மாதங்களுக்குள் பெற்றுக்கொள்ள பஸ் உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்னகாயா உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் பங்கேற்றது.

