டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கியதாக மரியா கொரினா மச்சாடோ அறிவிப்பு

டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கியதாக மரியா கொரினா மச்சாடோ அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு பெற வேண்டும் என்ற ஆசையை பலமுறை வெளிப்படுத்தி வந்தார்.

எட்டு போர்களை தாம் நிறுத்தியதாகவும் அவர் தொடர்ந்து கூறியிருந்த நிலையில், 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படவில்லை.

அந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ, தமக்கு வழங்கப்பட்ட பரிசை டிரம்புடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்தார்.

அவரது இந்த கருத்துக்கு நோபல் கமிட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஒருமுறை வழங்கப்படும் நோபல் பரிசு, வாழ்நாள் முழுவதும் அந்த நபருக்கே சொந்தமானது; அதை மாற்றவோ, பகிரவோ முடியாது என்று நோபல் அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதற்கிடையே, மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்பை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.

அந்த சந்திப்பின் போது, தமக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிடம் வழங்கியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )