கம்பஹா உயர் நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

கம்பஹா உயர் நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு

பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (11) அறிவிக்கப்படவுள்ளதால் இது நிகழ்ந்துள்ளது.

கம்பஹா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ரசாந்த கொடவெல ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை அறிவிக்க உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 41 பேர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )