இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கானடிக்கெட் விலை ஒரு இலட்சம் ரூபாய் வரை உயர்வு

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கானடிக்கெட் விலை ஒரு இலட்சம் ரூபாய் வரை உயர்வு

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான்
போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்

அதற்கமைய தற்போது இந்த போட்டிக்கான டிக்கெட்டின் விலை பல மடங்குகளாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும், முன்பதிவு செய்த ரசிகர்களுக்கே பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ICC இணையதளத்தில் இந்த வாரம் மிகவும் குறைந்த அளவிலான டிக்கெட்டுகள் மட்டுமே கிடைக்கக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடர்பில் ICC தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் போட்டி உறுதியாகியதைத் தொடர்ந்து மும்பை – கொழும்பு இடையிலான விமான கட்டணங்கள் திடீரென அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )