மாணிக்கக்கற்கள் கடத்தல் முயற்சி ; இருவர் கைது

மாணிக்கக்கற்கள் கடத்தல் முயற்சி ; இருவர் கைது

பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து வைத்து சீனாவிற்கு கடத்த முயன்ற இரண்டு இலங்கைப் பயணிகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் நேற்று (21) இரவு 10.20 மணியளவில் சீனாவின் செங்டு (Chengdu) நகருக்குப் புறப்பட்ட சீன விமான சேவையின் CA-426 இலக்க விமானத்தில் பயணிக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக்கற்கள் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களின் மொத்த பெறுமதி சுமார் 3 கோடியே 20 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொகுதியில் நீல மாணிக்கம், பத்மராகம், கிரிஞ்சி, சிவப்பு கற்கள், கனக, வெரோட், வைடூரியம், சந்திரகாந்தம், தோரமல்லி மற்றும் நட்சத்திரக் கல் உள்ளிட்ட பிரதான வகைகளைச் சேர்ந்த 756 கரட் எடையுள்ள 390 மாணிக்கக்கற்கள் அடங்கியிருந்ததாக சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )