
விபச்சார விடுதி முற்றுகை ; மூவர் கைது
கந்தானை நகரில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (21) இரவு கந்தானை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், விடுதியின் முகாமையாளர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாக மசாஜ் நிலையம் என்ற பெயரில் இந்த விபச்சார விடுதி செயல்பட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முகாமையாளர் பலங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும், பெண்கள் கொலம்பகே-ஆர மற்றும் அக்கரப்பத்தனை பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

