
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
மார்ச் மாதத்தின் முதல் 18 நாட்களில் 109,410 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தின் முதல் 18 நாட்களில் 190,536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்திருந்த நிலையில், இம்மாதம் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை நிலையில் சரிவு ஏற்பட்டுள்ளதை இந்த புள்ளிவிபரம் எடுத்துக்காட்டுகிறது.
CATEGORIES Sri Lanka

