அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் பஸ் மோதி பிக்குனி உயிரிழப்பு

அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் பஸ் மோதி பிக்குனி உயிரிழப்பு

அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியில் மின்னான சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பிக்குனி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

அவிசாவளையிலிருந்து எஹெலியகொடை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று, மின்னான சந்திக்கு அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கிய போது, வீதியில் பயணித்த பிக்குனி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த 77 வயதுடைய குறித்த பிக்குனி, எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )