
கொழும்பு துறைமுக நகரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திறந்தவெளி உணவக மையம் The Food Harbour
The Food Harbour ( ‘த ஃபுட் ஹார்பர்’ ) கொழும்பு துறைமுக நகரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திறந்தவெளி உணவக மையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
16ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் ஏனைய விருந்தினர்கள் உட்பட பல பிரமுகர்களுடன் இணைந்து, உத்தியோகபூர்வமாக இதனை ஆரம்பித்து வைத்தனர்.
உணவுத் துறைமுகம் பற்றிய கண்ணோட்டம் இடம்பெற்றதுடன்
தலைமை விருந்தினர்களால் முக்கிய உரைகள் நிகழ்த்தப்பட்டன.
கொழும்பு துறைமுக நகரத்தின் பரந்த வளர்ச்சிப் பார்வைக்கு பங்களிப்பதில் உணவு மையம் போன்ற முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
‘
இந்த ‘ஃபுட் ஹார்பர் ‘ இலங்கையின் முதல் சர்வதேச தரத்திலான திறந்தவெளி உணவு மற்றும் பான வகைகளுக்கான இடமாக
சுட்டிக்காட்டப்படுகிறது.
மக்கள் பயன்பாட்டிற்காக 16ஆம் திகதி திறக்கப்பட்ட இந்த உணவக வளாகம் ,சுற்றுலாப் பயணிகள், நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும் உணவு ஆர்வலர்களுக்கு உணவளிக்கும் உலகளாவிய மற்றும் உள்ளூர் உணவு வகைகளை வழங்கும் பல்வேறு வகையான உணவு மற்றும் பல பிராண்ட் குடிப்பான வகைகளையும் கொண்டது.
உணவருந்தல், மட்டுமின்றி ‘ தி ஃபுட் ஹார்பர்’
போர்ட் சிட்டி ஒரு சிறந்த ஓய்விடமாகவும் அதன் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது,
அதேநேரம், இலங்கை மற்றும் பிராந்திய உற்பத்தி பிராண்டுகளுக்கு உயர்-தெரிவுநிலை தளத்தை வழங்குவதுடன் வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படுகின்றது.

