ஈரான் போராட்டங்களில் 3,090 பேர் உயிரிழப்புபோராட்டங்களை ஜனாதிபதி டிரம்ப் தூண்டிவிட்டதாகக்உயர் தலைவர் காமெனி குற்றச் சாட்டு

ஈரான் போராட்டங்களில் 3,090 பேர் உயிரிழப்புபோராட்டங்களை ஜனாதிபதி டிரம்ப் தூண்டிவிட்டதாகக்உயர் தலைவர் காமெனி குற்றச் சாட்டு

ஈரானில் இடம்பெற்றுவரும் போராட்டங்களில் 3,090 பேர் உயிரிழந்ததாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட உரிமைகள் குழுவின் தகவல்களை ஆதாரம் காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பல நாட்கள் மின் தடைக்குப் பிறகு இணைய சேவை ஓரளவு இயங்குவதாக அங்குள்ள , குடியிருப்பாளர்கள் கூறுவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவிக்கின்றது.

போராட்டக்காரராகள் மீது ஈரான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட வன்முறை ஒடுக்குமுறைகள் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்றதாக மனித உரிமைகள் குழுக்கள் கூறியதைத் தொடர்ந்து,
பல வாரங்களாக நீடிக்கும் இந்த போராட்டங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூண்டுதலே காரணம் என இன்று ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டினார்.

ஈரானில் 2025 டிசம்பர் 28 அன்று பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் பரவலான ஆர்ப்பாட்டங்களாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டங்களில் மத ஸ்தலங்கள் உட்பட பெருந்தொகையான அரச சொத்துக்களும் சேதமாக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டன

இந்நிலையில் ஈரான் போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால் “மிக வலுவான நடவடிக்கை எடுப்பேன்” என டிரம்ப் பலமுறை அச்சுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று டிரம்ப்பின் சமூக ஊடகப் பதிவில், தெஹ்ரானின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அவர்கள் போராட்டக்காரர்களுக்கான தூக்கு தண்டனைகளை ரத்து செய்ததாகக் கூறினார்.

“மக்களை தூக்கிலிடும் திட்டம் இல்லை” ஆனால் ” உள்நாட்டு அல்லது சர்வதேச குற்றவாளிகளை தண்டிக்காமல் விடமாட்டோம்,” என்று இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கு காரணமென ஈரான் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )