யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து லொறி ஒன்றுடன் மோதி விபத்து

யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து லொறி ஒன்றுடன் மோதி விபத்து

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் இன்று காலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளது.

யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பேருந்தில் 30 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )