
பெம்முல்ல எல்லேஓயாவில் குளத்தில் நீராடச் சென்றவர் மாயம்
கம்பஹா மாவட்டம் பெம்முல்ல – எல்லேஓயா பகுதியில் அமைந்துள்ள மீகஹமுல்ல குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர
இந்த சம்பவம் நேற்று (18) பதிவாகியுள்ளதாகவும், காணாமல்போனவர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த நபர் தனது மனைவியுடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், பெம்முல்ல எல்லேஓயாவில் அமைந்துள்ள மீகஹமுல்ல குளத்திற்கு நீராடச் சென்றபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

