சட்டவிரோத மதுபான உற்பத்தி ; ஒருவர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தி ; ஒருவர் கைது

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார். இதன்போது சம்பவ இடத்திலிருந்து மற்றைய சந்தேக நபர்கள் தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், குறித்த சுற்றிவளைப்பின் போது 50 ஆயிரம் மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானம், 7 இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )