இரத்தினபுரியில் கடுமையான பனி பொழிவு

இரத்தினபுரியில் கடுமையான பனி பொழிவு

இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது கடுமையான பனி பொழிவு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் பலாங்கொடை, இறக்குவானை, சூரியகந்த உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதலான பனி பொழிவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக பார்வைத் தூரம் குறைவடையக்கூடியதால், வாகன சாரதிகள் வேகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )