
தந்தையின் கையிலிருந்து விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு
தந்தையின் கையிலிருந்த இரண்டரை வயது குழந்தை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த துயரச் சம்பவம் களுத்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய பெண் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான கடந்த 7ஆம் திகதி, குழந்தையின் தந்தை தனது வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் குழந்தையை கையில் வைத்துக்கொண்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் தந்தை சற்றே உறங்கிய நிலையில் குழந்தை கையிலிருந்து தவறி தரையில் விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் குழந்தையின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி குழந்தைகள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
எனினும், வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

