வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இன்று (07) பிற்பகல் 03.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். 

மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )