
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் ; சபலென்கா மீண்டும் சாம்பியன்
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா (பெலாரஸ்) – அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள அமண்டா அனிஸ்மோவா மோதினார்கள்.
இதில் சபலென்கா 6-3, 7-6 ( 7-3) என்ற நேர் செட் கணக்கில் அனிஸ் மோவாவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார். அ
சபலென்கா கடந்த ஆண்டு ஜெசிகா பெகுலாவை தோற்கடித்து அமெரிக்க ஓபன் கிராண்ட் சிலாமை கைப்பற்றினார். தற்போது தொடர்ச்சியாக 2-வது முறையாக பட்டம் பெற்றுள்ளார்.
CATEGORIES Sports News

