யாழில் சுகாதார அமைச்சிற்கு சொந்தமான வாகனத்தில் மதுபானம் அருந்திய அரச ஊழியர்கள்

யாழில் சுகாதார அமைச்சிற்கு சொந்தமான வாகனத்தில் மதுபானம் அருந்திய அரச ஊழியர்கள்

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றின் சாரதி மதுபானம் அருந்திக்கொண்டு வாகனம் செலுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான, அவசர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குறித்த வாகனத்தில் வைத்து, வாகனத்தின் சாரதி மற்றும் மேலுமொருவர் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.

இதனை அவதானித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணொளி பதிவு செய்துள்ளதுடன், இதுதொடர்பில் குறித்த வாகன சாரதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், இது நோயாளர் காவு வண்டி அல்ல என்றும், இதனை நீங்கள் ஏன் கேட்கின்றீர்கள் என்றும் காணொளி பதிவு செய்தவரிடம் கடுமையாக கூறிவிட்டு வாகனத்தை எடுத்து பின்னால் செலுத்திச் சென்றுள்ளார்.

குறித்த வாகனத்திற்குள் மதுபான போத்தல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபானம் அருந்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )