அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம்

அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம்

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட ஆசிரியர் சம்பள உயர்வு நேற்று (20) வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் கல்விச் சேவை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்பட்டதாகவும், அதற்குரிய ஆசிரியர் சம்பளம் நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பள உயர்வு 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விச் சேவையில் பணியாற்றும் அரச ஊழியர்கள் இதன் பயனை பெற்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )