ரென்னெஸ் அணியின் வீரர் ஜெர்மி ஜாக்கெட் லிவர்பூலுடனான 60 மில்லியன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

ரென்னெஸ் அணியின் வீரர் ஜெர்மி ஜாக்கெட் லிவர்பூலுடனான 60 மில்லியன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

ரென்னஸ் அணியின் (Rennes) பாதுகாவலர் (Defender) ஜெர்மி ஜாக்கெட்டுடன் (Jeremy Jacquet) லிவர்பூல் கால்பந்தாட்ட கழகம் £60 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் , 20 வயதான ஜெர்மி ஜாக்கெட்டிற்கு £55 மில்லியன் நிரந்தர கட்டணமாகவும்,மேலும் £5 மில்லியன் செயல்திறன் அடிப்படை ஊக்கத் தொகையாகவும்
செலுத்தப்படவுள்ளது.

பிரான்ஸ் அண்டர்-21 தேசிய அணியின் வீரரான ஜெர்மி ஜாக்கெட்டுடன் ஒப்பந்தம் செய்ய செல்சி அணி தீவிரமாக முயற்சித்து வந்தது

எனினும், கடந்த 48 மணி நேரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, ஜெர்மி ஜாக்கெட் லிவர்பூலுக்கு(Liverpool) செல்ல விரும்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், நடப்பு சீசன் முடிவுவரை ஜெர்மி ஜாக்கெட் (Jeremy Jacquet) ரென்னஸ் (Rennes) அணியிலேயே தொடருவார் எனவும் அதன்பின், கோடை காலத்தில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )