டித்வா புயலில் உயிரிழந்தோரில் 525 பேருக்கு மரணச் சான்றிதழ்

டித்வா புயலில் உயிரிழந்தோரில் 525 பேருக்கு மரணச் சான்றிதழ்

‘டித்வா’ புயல் காரணமாக உயிரிழந்தவர்களில் இதுவரை 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புயல் அனர்த்தத்தில் உயிரிழந்த மேலும் சில சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

புயல் அனர்த்தம் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடையாளம் காணப்படாத சடலங்கள் தொடர்பில் தேவையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )