
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து 20 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்
பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசார் குறித்த பெண்ணின் சடலத்தை தோனி மூலம் கரைக்கு எடுத்து வந்தனர் .
குறித்த இளம் பெண் தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதையுடையவர் எனவும், கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வந்துள்ளது.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டது .
மேலதிக விசாரனையினை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

