தெனியாயவில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் குறித்து ருஹூணு சுற்றுலா பணியகம் கவனம்

தெனியாயவில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் குறித்து ருஹூணு சுற்றுலா பணியகம் கவனம்

கொட்டபொல பிரதேச சபைப் பகுதியின் தெனியாய, அனில்கந்த மற்றும் மெடெரிபிட்டிய பகுதிகளில் உள்ள புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் காணவும், அனுபவ அடிப்படையிலான செயல்பாடுகளை அடையாளம் காணவும், தற்போதுள்ள சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதுப்பித்தல்கள் உள்ளிட்ட மேம்பாட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், ருஹூணு சுற்றுலா பணியகத்தின் தலைவர் திரு. பி.ஜி.ஜி.எஸ். ஜெயன் உள்ளிட்ட குழு, அண்மையில்; ஒரு கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டது.

இங்கு, Adventure Tourism, Eco Tourism மற்றும் அதற்கு தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை எடுப்பது, சமூகத்திற்குத் தெரிவித்தல் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பங்களிப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, சிங்கராஜ வனத்திற்கு பிரவேசிக்கும் பிட்டதெனிய நுழைவாயிலுக்கு அருகில் மேலும் ஆமற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் முறையான சேவைகளை வழங்குவது தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சமூகத்துடன் முன்கூட்டியே கலந்துரையாட வேண்டியதன் அவசியம் என்பனவும் அடையாளம் காணப்பட்டது.

இந்த நிகழ்வில் கொட்டபொல பிரதேச சபையின் தலைவர், அரசாங்க அதிகாரிகள், ரு{ஹணு சுற்றுலா பணியகத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எச்.யு.என். சமரதுங்க மற்றும் அபிவிருத்தி அதிகாரி எஸ்.யு. அநுராதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )