
பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் தீவிபத்து ; 73 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் அமைந்துள்ள ‘குல் பிளாசா’ என்ற வணிக வளாகத்தில் கடந்த 17ஆம் திகதி இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் இயங்கிய இந்த வணிக வளாகத்தின் மூன்று தளங்களிலும் தீ வேகமாகப் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது 73 ஆக உயர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவே தீவிபத்துக்குக் காரணமாக இருந்ததாகவும், அங்கிருந்து தீ மளமளவென பிற கடைகளுக்குப் பரவியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ நேரத்தில் தீப்பற்றியதால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், தீவிபத்தில் சிக்கிய வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

