
சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய ஹர்திக் பாண்டியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 25 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய பாண்டியா இரண்டாம், மூன்றாம் போட்டிகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாண்டியா, நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
- சிகண்டர் ராசா, 2. சைம் அயூப், 3. ஹர்திக் பாண்டியா, 4. றொஸ்டன் சேஸ், 5. மொஹமட் நவாஸ்.
CATEGORIES Sports News

